பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1001/ '16
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் கமநல வங்கி எனும் பெயரிலான வங்கியொன்று இயங்கி வருகின்றது என்பதையும்;
(ii) மேற்படி வங்கி 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டம் அல்லது 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பதையும்;
(iii) பதிவு செய்யாது மக்களிடமிருந்து வைப்புக்களை கையேற்பது சட்டவிரோதமானது என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) கமநல வங்கியைப் பதிவு செய்யாமைக்கான காரணம் யாது என்பதையும்;
(ii) மேற்படி வங்கியைப் பதிவு செய்ய அல்லது இரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-09
கேட்டவர்
கௌரவ உதய கம்மன்பில, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2017-02-21
பதில் அளித்தார்
கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks