01

E   |   සි   |  

 திகதி: 2016-11-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

0897/2016: LGN Development Projects in Thoppur Divisional Secretariat sub office

897/ '16

கெளரவ இம்ரான் மஹ்ரூப்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) திருகோணமலை மாவட்டத்தில், தோப்பூர் உப பிரதேச செலயகம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

(ii) மேற்படி நிறுவனத்தின் நிரந்தர மற்றும் பதில் கடமையாற்றுகின்ற பணியாட்டொகுதியினரின் தகவல்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி அலுவலகம் பொது மக்களுக்கு ஆற்றும் சேவை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்ட LGN அபிவிருத்தி கருத்திட்டம் தோப்பூர் உப பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப் படாமைக்கான காரணம் யாது என்பதையும்;

(ii) முன்னாள் மாவட்ட செயலாளரினால் திட்டமிட்டு மேற்படி கருத்திட்டம் நிறுத்தப்பட்டதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) பொதுமக்களின் நலனை முன்னிட்டு தோப்பூர் உப அலுவலகத்தின் பணியாட்டொகுதியினரின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் மூலம் மேலதிக சேவையைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-15

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks