E   |   සි   |  

 திகதி: 2016-11-15   பதிலளிக்கப்பட்டவைகள் 

0883/2016: Pension for Architect Officers in Sri Lanka Volunteer Force

883/ '16

கௌரவ விதுற விக்கிரமநாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த யுத்த காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வார்ப்புத் தொழில்நுட்பவியலாளர் குழுவொன்று, போர்க் கலங்களை உற்பத்தி செய்வதற்காக இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) அச்சந்தர்ப்பத்தில் பணிக்கொடைக் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய உரித்து உள்ளதாக இவர்களிடம் தெரிவிக்கப்பட்டள்ளது என்பதையும்;

(iii) மேற்படி வார்ப்புத் தொழில்நுட்பவியலாளர்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள பாரிய சேவை பொது மனுக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழுவின் செயலாளரினால் 2012.12.03 ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்றின் மூலம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(iv) ஓய்வூதியத் திணைக்களத்தில் இவர்களுக்கு ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லாத நிலையின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் குறித்த கடிதம் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்தல் போன்ற வழிமுறையைப் பின்பற்ற வேண்டுமென்றிருந்த போதிலும், அவ்வாறு செய்யாதிருப்பதற்கான காரணம் யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-15

கேட்டவர்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks