04

E   |   සි   |  

 திகதி: 2016-09-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0799/2016: Conducting SLEAS and SLAS examinations in North and East

799/ '16

கௌரவ சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS), இலங்கை நிருவாக சேவை (SLAS) போன்ற சேவைகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகள் கொழும்பில் மட்டுமே நடத்தப்படுகின்றன என்பதையும்;

(ii) மேற்படி பரீட்சைகள் கொழும்பிலுள்ள பரீட்சை நிலையங்களில் மாத்திரம் நடாத்தப்படுவதன் மூலம் தூரப் பிரதேசங்களிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) விண்ணப்பதாரர்கள் எதிர்நோக்க நேரிடுகின்ற சிக்கல்கள் தொடர்பாக கவனம் செலுத்தி, எதிர் காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான பரீட்சைகளை நடாத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-06

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks