01

E   |   සි   |  

 திகதி: 2016-09-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0789/2016: Horana Cooperate Society corruption

789/ '16

கௌரவ விதுர விக்ரமநாயக்க,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) ஹொரண பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் உடைமையில் இருந்த தங்க நகைகள் ஏலவிற்பனையின்றி முழுத் தொகையும் ஒரே நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) கயான் துஷார எனும் மரணித்த ஆளொருவரின் கையொப்பத்தை இட்டு காசோலைகள் மாற்றப்பட்டமை தொடர்பில் பொலிஸ் மோசடிப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்து விசாரணை மேற்கொள்வதற்காக எடுக்கப்பட்ட தீர்மானம் இதுவரை செயற்படுத்தப்படவில்லை என்பதையும்;

(iii) அரிசி, கறுவாடு போன்ற பொருட்களை கொள்வனவு செய்கையில் தரகு பெற்றுக் கொள்ளல், மூனகம கிராமிய வங்கிக் கிளைக்கு தரம் குறைந்த சிசிரிவி கெமராத் தொகுதியை அதிக விலைக்கு கொள்வனவு செய்தல் மற்றும் தனியார் நிறுவனமொன்றிலிருந்து சங்கத்துக்கு கிடைக்கும் பணத்தில் 2% தொகையைப் பெற்றுக்கொள்ளல் போன்ற ஊழல் செயற்பாடுகள் தலைவர் உள்ளிட்ட சிலரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதென்பதையும்;

அவர் அறிவரா?

(ஆ) கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட சிலரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-09

கேட்டவர்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks