logo

03

E   |   සි   |  

 திகதி: 2016-09-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0785/2016: Northern Expressway - the new route

785/ '16

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு ,— (1)

(அ) (i) கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பத்தில் கண்டி வரை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த அதிவேக நெடுஞ்சாலையை பின்னர் வடக்கு கிழக்கு வரை நீடிக்கும் நோக்கத்துடன், "வடக்கு மத்திய அதிவேக நெடுஞ்சாலை" என்ற பெயரில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதென்பதையும்;

(ii) 2015 மார்ச் மாதத்தில் தற்போதய அரசாங்கம் அதன் பெயரை மாற்றி கடவத்த, கொஸ்ஹின்ன பிரதேசத்தில் இருந்து வேலைகளை ஆரம்பித்ததென்பதையும்;

(iii) கம்பஹா மாவட்டத்தினூடாக என்டேரமுல்லவில் இருந்து மீரிகம அம்பேபுஸ்ஸ வரை நிர்மாணிக்க உத்தேசித்துள்ள முதலாம் கட்டம் கம்பஹா மாவட்ட மக்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இந்த வீதியின் புதிய திட்டம் மற்றும் செல்லும் வழி பற்றி சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் வதிவாளர்கள் விழிப்புணர்வூட்டப்பட்டுள்ளனரா;

(ii) வீதிக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய காணிகள் இனங்காணப்பட்டு அடையாளமிடப்பட்டுள்ளனவா;

(iii) குடியமர்ந்துள்ள காணிகள், தொழில்முயற்சி நிலையங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள் மற்றும் அரசாங்க காணிகள் என்ற வகையில் வகைப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளனவா;

(iv) உரித்துக்களை பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீட்டு முறையீடுகளை ஏற்றுக்கொள்ளலும் பரிசீலனை செய்தலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா;

(v) விலைமதிப்பீடு செய்தலும் நட்டஈடு செலுத்துதலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) வீதியை நிர்மாணிப்பதிலான நடப்பு நிலைமை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-09

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks