04

E   |   සි   |  

 திகதி: 2016-06-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0616/2016: Restricting Smoking

616/ ’16 கௌரவ இஷாக் ரஹுமான்,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) புகைபிடிப்பதனால் புற்றுநோய், பாரிசவாதம் மற்றும் சிறுநீரக நோய்கள் பரவலாக ஏற்படுகின்றதென்பதையும்; (ii) இது நாட்டு மக்களின் சுகாதார நிலைமை மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கின்றதென்பதையும்; (iii) புகையிலையின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை விட பொது மக்களின் சுகாதார நிலைமை சீர்குலைதல் பொருளாதாரத்திற்கு பாதிப்பாகுமென்பதையும்; அவர் ஏற்றுக்கொள்வாரா? (ஆ) (i) புகைபிடித்தலை முற்றாக நிறுத்த முடியாதா என்பதையும்; (ii) பாடசாலைகளுக்கு பக்கத்தில் சிகரெட் விற்பனை செய்யப்படுவதை முற்றாக நிறுத்த முடியாதா என்பதையும்; (iii) சிகரெட்டின் விலையை தாங்க முடியாத அளவிற்கு உயர்த்துவதற்கு முடியாதுள்ளது ஏன் என்பதையும்; (iv) இரசாயன உரப் பாவனையின் மூலம் சிறுநீரக நோய் ஏற்படும் போக்கு அதிகரிப்பதால் உரம் தொடர்பில் கடுமையான தீர்மானங்களை மேற்கொண்ட அரசாங்கம், புகையிலை தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பது ஏன் என்பதையும்; (v) இதற்கான காரணம் பல்தேசிய கம்பனிகளின் அழுத்தங்களா என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-24

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks