01

E   |   සි   |  

 திகதி: 2016-07-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0614/2016: Road from Galewela to Kekirawa

614/’16 கௌரவ இசாக் ரஹுமான்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கொழும்பு - அனுராதபுரம் பிரதான வீதியில், கலேவெல நகரத்திலிருந்து இடதுக்குத் திரும்பி, கலாவெவ குளக்கட்டினூடாக, இஹலகம சந்தியைத் தாண்டி, தோணிகல சந்தியில் A-9 பிரதான வீதிக்கு தொடர்புபடும் வீதி, 50 வருடங்களாக மறுசீரமைக்கப்படவில்லை என்பதையும்; (ii) இவ்வீதியினூடாக, கலேவெலயிலிருந்து A-9 வீதியினூடாக யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய நகரங்களை எளிதாக சென்றடையலாம் என்பதையும்; (iii) இதன் மூலம் பொருளாதார நன்மைகள் கிடைப்பதுடன், பிரதான வீதியில் வாகன நெருக்கடியும் குறைவடையுமென்பதையும்; அவர் ஏற்றுக்கொள்வாரா? (ஆ) (i) மகாவலி பிரதேச மக்களுக்கு வசதி ஏற்படுத்தும் 46 கி.மீ. கொண்ட இவ்வீதி புனரமைக்கப்படாமைக்கான காரணம் யாது; (ii) இவ்வீதியை துரிதமாக புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா; என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (இ) (i) கடந்த அரசாங்கத்தினால் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வேலைகள் நிறுத்தப்பட்டுள்ள கெகிராவ நகரத்திலிருந்து கனேவல்பொல வரையான 07 கி.மீ. வீதியின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பாரா; (ii) ஆமெனில் அத்திகதி யாது; என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-07-07

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks