01

E   |   සි   |  

 திகதி: 2016-06-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0562/2016: Fraud and Corruption in Technical College of Jaffna

562/ '16

கௌரவ எஸ். சிறீதரன்,— திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடு பற்றி அவர் அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், இதுவரை அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் புரிந்துள்ள நிதி மோசடி நிரூபிக்கப்பட்ட பின்னர் இவருக்கு இடமாற்றும் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், குறித்த இடமாற்றம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

(v) மேற்படி இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளதா என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியின் பிற கிளைகள் அந்த மாவட்டத்தில் அமைந்துள்ளனவா என்பதையும்;

(ii) இன்றேல், அந்த மாவட்டத்தில் வசிக்கும் 650,000 மக்களுக்கு மேற்படி தொழில்நுட்பக் கல்லூரி போதுமானதா என்பதையும்;

(iii) இன்றேல், அது தொடர்பாக எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-24

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks