பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2016-06-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0548/2016: Task Force for National Reconciliation

548/ '16

கௌரவ விமல் வீரவங்ச,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) தேசிய நல்லிணக்கத்துக்கான செயலாற்றுப் படையணி என்ற நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அது அமைச்சரவையின் அங்கீகாரத்தின் கீழ் நிறுவப்பட்டதா என்பதையும்;

(iii) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுக்கமைய அது நிறுவப்பட்டதா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) மேற்குறித்த செயலாற்றுப் படையணி நிறுவப்பட்டதன் நோக்கம் மற்றும் அதற்கு ஒப்படைக்கப்பட்ட கடமைப் பொறுப்புகள் யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) மேற்குறித்த செயலாற்றுப் படையின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் யாவர் என்பதையும்;

(ii) இவர்களது தகைமைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

(iii) மேற்படி செயலாற்றுப் படையணியின் பணிகளுக்காக அதன் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் 10 பேருக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-10

கேட்டவர்

கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks