பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0308/ ‘10
கெளரவ தயாசிறி ஜயசேக்கர, — நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மக்கள் வங்கியின் ஓய்வுபெற்றோர் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 5000ஐத் தாண்டி இருப்பதையும்,
(ii) இவர்களது வாழ்வாதார நிதியுதவி 1996 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதென்பதையும்,
(iii) தொழில் நியாயச் சபையினால் வாழ்வாதார நிதியுதவியை அவர்களுக்கு வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் மக்கள் வங்கியின் நிர்வாகம் அதனை நிராகரித்துள்ளதென்பதையும்,
(iv) அந்த கொடுப்பனவை வழங்குவதன் மூலம் வங்கியின் பங்கிலாபத்துக்கு பாதிப்பு ஏற்படாதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) இவர்களது வாழ்வாதார நிதியுதவியை வழங்குவதற்காக அமைச்சு தலையீட்டை மேற்கொள்ளுமா என்பதையும்,
(ii) ஆமெனின், இவர்களது வாழ்வாதார நிதியுதவி எத்தினத்தில் பெற்றுக் கொடுக்கப்படும் என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-03
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks