01

E   |   සි   |  

 திகதி: 2016-05-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0440/2016: New Housing Program under National Housing Authority

440/ '16

கௌரவ டீ. வீ. சானக,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

(அ) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ரூபா 250,000/- பெறுமதியான வீடமைப்பு வேலைத் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்ற பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் காணிகள் அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி காணிகள் வழங்கப்படும்போது மாவட்ட காணி பயன்பாட்டுக் குழுவினால் குறிப்பிட்ட காணித் துண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iii) ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவு ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட நலன்பெறுநர்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;

(iv) மேற்படி நலன்பெறுநர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட முறையியல் யாதென்பதையும்;

(v) நலன்பெறுநர்களை தெரிவுசெய்வதில் பங்கேற்ற அரச உத்தியோகத்தர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

(vi) தெரிவுசெய்யப்பட்ட நலன்பெறுநர்கள், காணி உரித்தைப் பெறுவதற்கான உரிய தகைமைகளைக் கொண்டவர்களென திருப்தியடைய முடியுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-05-18

கேட்டவர்

கௌரவ டி.வீ. சானக, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks