பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
406/ ’16
கௌரவ மகிந்தானந்த அழுத்கமகே,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நாவலப்பிட்டி தேர்தல் ஆளுகைப் பிரதேசத்தில், பஸ்பாகே பிரதேச செயலாளர் பிரிவினுள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சாட்டப்பட்டுள்ள இம்புல்பிட்டிவத்த காணியில், ஆணைக்குழுவினது அங்கீகாரத்தின் கீழ் சட்டரீதியான முறையில் ஆசிரியர் கிராமமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) சம்பந்தப்பட்ட ஆசிரியர் கிராமத்தை தாபித்தல் மற்றும் அதற்கான உறுதிகளை வழங்குதல் பொருத்தமாகுமென மத்திய மாகாண கல்வித் திணைக்களம், மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண பிரதான அமைச்சு பரிந்துரை செய்துள்ளன என்பதையும்;
(iii) மேற்படி ஆசியர் கிராமத்தின் காணி பெறுனர்களான ஆசியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வித் துறையைச் சார்ந்த சகலரும் தற்போது வீடுகளை நிர்மாணித்து மேற்படி வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வசதிகளைப் பெற்று குடியமர்ந்துள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) புதிய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரசாங்கத்தின் பலம்பொருந்திய அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் குறித்த ஆசிரியர் கிராமத்தை அகற்றி அக்காணிகளை மீண்டும் சுவீகரித்துக்கொள்ள வேண்டுமென மேற்கொண்ட கோரிக்கையின் பிரகாரம் காணி பெறுனர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-03-23
கேட்டவர்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks