logo

03

E   |   සි   |  

 திகதி: 2010-07-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0294/2010: SLTB

0294/ ’10 கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) 1991.08.25 ஆந் திகதி இ.போ.ச. மக்கள் மயப்படுத்தப்பட்டதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முதல் நியமனத் திகதி தொடக்கம் பணிக்கொடை செலுத்துவதற்கு இ.போ.ச. கடமைப்பட்டுள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா? (ஆ) (i) முதல் நியமனத் திகதி தொடக்கம் அவர்களுக்குப் பணிக்கொடை செலுத்த முடியாமலிருப்பதாகக் கூறி இ.போ.ச. நீதிமன்ற தீர்ப்பொன்றை கோரியிருந்ததா என்பதையும், (ii) அந்த நீதிமன்றத் தீ்ர்ப்பு என்னவென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (இ) (i) தொழில் ஆணையாளரினால் அந்த ஓய்வு பெற்றோருக்கு பணிக்கொடை செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், (ii) அவ்வாறெனின், ஓய்வு பெற்ற ஊழியர்கள் எத்தனை பேருக்கு என்பதையும், (iii) செலுத்தவிருக்கும் மொத்த தொகை எவ்வளவு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) (i) அந்த ஓய்வு பெற்றோருக்கு பணிக்கொடை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதையும், (ii) அந்தப் பணத்தைத் துரிதமாகச் செலுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-07-20

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks