04

E   |   සි   |  

 திகதி: 2016-02-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0337/2016: Political vengeance in SLTB after Presidential Elections 2015

337/ '15

 

கௌரவ நாமல் ராஜபக்‌ஷ,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)   (i)      2015 சனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கை போக்குவரத்துச் சபையினுள் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்களின் எண்ணிக்கை யாது;

          (ii)      அரசியல் பழிவாங்கல்களை சீராக்கும் பொருட்டு, சேவையிலிருந்து நீக்கப்பட்ட குறிப்பிட்ட உத்தியோகத்தர்கள், அவர்கள் வகித்த பதவிகளில் மீள சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்களா;

(iii) நிதி மோசடி, ஒழுக்கத்துக்கு முரணான செயல்கள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது, 2015 சனாபதித் தேர்தலின் பின்னர் அரசியல் விதப்புரைகளின் பிரகாரம் அவர்கள் மீண்டும் இலங்கை போக்குவரத்து சபையில் இணைக்கப்பட்டு அல்லது சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்களா;

(iv) ஆமெனில், இவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா;

என்பதை அவர்  இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2016-02-24

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks