04

E   |   සි   |  

 திகதி: 2016-02-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0319/2016: State owned Lands

319/ '15

கெளரவ ஜயந்த சமரவீர,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015.11.15 திகதியன்று உள்ளவாறு இலங்கையினுள் அரசுக்குச் சொந்தமான காணிகளின் அளவு யாதென்பதையும்;

(ii) மேற்படி காணிகளில் குத்தகைக்கு வழங்கியுள்ள காணிகளின் அளவு யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) அரசுக்குச் சொந்தமான ஒவ்வொரு காணியின் பெயர் மற்றும் அளவு, பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மாவட்ட வாரியாக தனித்தனியாக யாதென்பதையும்;

(ii) குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு காணியின் பெயர், அளவு மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காலம், வருடாந்த குத்தகைகத் தொகை மற்றும் காணி அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மாவட்டம் தனித்தனியாக யாதென்பதையும்;

அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

(இ) (i) இன்றளவில் அரசுக்குச் சொந்தமான காணிகளை விற்பதற்கு அல்லது குத்தகைக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) விற்பதற்கு அல்லது குத்தகைக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ள காணிகள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி காணிகள் விற்கப்படும் அல்லது குத்தகைக்கு வழங்கப்படும் நபர்கள் யாவர் என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-24

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks