பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
287/ '15
கௌரவ எஸ். எம். மரிக்கார்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கொலன்னாவ பிரதேசத்தின் ஊடாகச் செல்கின்ற 151, 714 மற்றும் 166 ஆம் இலக்க வீதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் மூலம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லையென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வீதிகளில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாமையினால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி வீதிகளில் இ.போ.ச பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்காக நிரந்தரமான திட்டமொன்று உருவாக்கப்படுமா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி வீதிகளில் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;
(iv) மேற்படி வீதிகளில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளுக்கு தனியார் பயணிகள் போக்குவரத்து சேவை வழங்குனர்களிடமிருந்தும் ஏனைய குழுக்களிடமிருந்தும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் தொந்தரவுகளை தடுத்து நிறுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-11
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-02-11
பதில் அளித்தார்
கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks