பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
283/'15
கௌரவ எஸ்.எம். மரிக்கார் ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஒவ்வொரு தேசிய பாடசாலைக்கும் ஒரே சமனான அனுகூலங்கள் வழங்கப்படுகின்றனவா;
(ii) இன்றேல், அனுகூலங்கள் வழங்கப்படும் முறையியலொன்று உள்ளதா;
(iii) ஆமெனில், அம்முறையியல் யாது;
என்பதை அவர் அறிவிப்பாரா?
(ஆ) (i) 2007 ஆம் ஆண்டில் அப்போதைய கல்வி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட கொட்டிகாவத்தை ராஜசிங்ஹ வித்தியாலயத்தின் மூன்று மாடிக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் திகதி யாது;
(ii) மேற்படி பாடசாலையில் நிலவும் 13 ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு;
(iii) மேற்படி பாடசாலையின் பழுதடைந்துள்ள கட்டடங்களை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா;
(iv) ஆமெனில், அத்திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் வேலைத்திட்டம் எவ்வளவு காலத்தில் ஆரம்பிக்கப்படும்;
(ii) இதற்காக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்தும் ஒரே அளவான எண்ணிக்கையில் பாடசாலைகள் தெரிவு செய்யப்படுமா;
(iii) ஆமெனில், இப்பாடசாலைகளின் எண்ணிக்கை யாது ;
(iv) இந் நடைமுறை ஒவ்வொரு பிரதேசத்திலும் சமாந்தரமாக ஆரம்பிக்கப்படுமா;
(v) முன்னுரிமை வழங்கப்படும் பிரதேசங்கள் உள்ளனவா;
(vi) ஆமெனில், இப்பிரதேசங்கள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-28
கேட்டவர்
கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-01-28
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks