பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
270/ '15
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடற்படையின் தெற்குத் தலைமையகத்தின் ஆயுதக் களஞ்சியசாலையில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடல் பாதுகாவலர்களது ஆயுதங்களை வைத்திருத்தல் நடைபெற்ற காலப்பகுதி யாது;
(ii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியினுள் குறித்த நடவடிக்கையின் மூலம் கடற்படை பெற்றுக்கொண்ட வருமானம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) காலி துறைமுகத்துக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் அவன்காட் கம்பனியினால் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் பேணிவரப்பட்ட காலப்பகுதி யாது;
(ii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியினுள் குறித்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படை மற்றும் வரையறுக்கப்பட்ட ரக்னா லங்கா பாதுகாப்பு கம்பனி பெற்ற வருமானம் வெவ்வேறாக யாது;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை பேணிவருதல் அவன்காட் கம்பனியினால் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், குறித்த கம்பனி ஏதேனும் சட்டத்தை மீறியுள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதா;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-26
கேட்டவர்
கௌரவ உதய கம்மன்பில, பா.உ.
அமைச்சு
பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks