04

E   |   සි   |  

 திகதி: 2010-08-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0281/2010: Facilitators in Plantation Areas

0281/ ‘10

கெளரவ ஆர். யோகராஜன்,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     சிங்கள மொழியறிவு இல்லாத பொதுமக்கள், அரச நிறுவனங்களில் அலுவல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவுமுகமாக 500 உதவி புரிபவர்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் நியமிக்கப்பட்டனர் என்பதையும்,

(ii) அவ்வாறான அனுசரணையாளர்களுள் 250 இற்கும் அதிகமானோர் ஆசிரிய பதவிகள் போன்ற வேறு பதவிகளை பெறும் பொருட்டு தமது தொழில்களை விட்டு விலகிச் சென்றுள்ளனர் என்பதையும்,

(iii) இவ்வெற்றிடங்களை நிரப்புமுகமாக விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதும் இற்றை வரை அவை நிரப்பப்படவில்லை என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், மேற்படி வெற்றிடங்கள் எக்கால வரையறையினுள் நிரப்பப்படும் என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-08-03

கேட்டவர்

கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks