04

E   |   සි   |  

 திகதி: 2015-12-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0241/2015: Reserves according Import potential (in months) 2000 -2014 and 2015

241/ '15

 

கௌரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2000 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு சொந்தமான மொத்த உத்தியோகபூர்வ ஒதுக்கங்களின் இறக்குமதிச் சாத்தியவளம் (மாதங்களில்) ஒவ்வொரு வருடத்துக்கமைய வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) வியாபாரப் பண்டங்கள் தொடர்பில் கணிப்பிடப்பட்ட மொத்த உத்தியோகபூர்வ ஒதுக்கங்களின் இறக்குமதிச் சாத்தியவளம், வியாபாரப் பண்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பில் சீராக்கல் செய்யுமிடத்து, ஒவ்வொரு வருடத்துக்கமைய மாறுபடும் விதம் யாதென்பதையும்;

(iii) 2000 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை மொத்த வெளிநாட்டுச் சொத்துக்களின் இறக்குமதிச் சாத்தியவளத்தின் பெறுமதி ஒவ்வொரு வருடத்துக்கமைய வெவ்வேறாக யாதென்பதையும்;

(iv) 2015 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களினுள் மொத்த உத்தியோகபூர்வ ஒதுக்கங்களின் இறக்குமதிச் சாத்தியவளம் எவ்வாறு இருந்ததென்பதையும்;

(v) மேற்படி நிலைமையில் தாக்கத்தை எற்படுத்திய காரணங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-11

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks