பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
233/ '15
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) SML Frontier Automotives (Pvt.) Ltd. நிறுவனத்தினால் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டுக்கு லேண்ட் ரோவர் டிபெண்டர் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதா;
(ii) ஆமெனில், வழங்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் இவ்வாகனங்களின் மொத்தப் பெறுமதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) லேண்ட் ரோவர் வாகனங்களின் சந்தைப்படுத்தலுக்காக இந்நாட்டிலுள்ள முகவர்கள் யாவர்;
(ii) லேண்ட் ரோவர் வாகனங்களைக் கொள்வனவு செய்கையில், வழங்குநரைத் தெரிவு செய்வதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட பெறுகை முறையியல் யாது;
(iii) இவ்வாகனங்களைக் கொள்வனவு செய்கையில், இலங்கை அரசாங்கத்தினால் நாணயக் கடிதங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பின் அது எந்நிறுவனம் சார்பில்;
(iv) மேற்படி நிறுவனம் லேண்ட் ரோவர் வாகன உற்பத்தியாளரா;
(v) இன்றேல், அந்நிறுவனத்தின் பெயர் யாது;
(vi) SML Frontier Automotives (Pvt.) Ltd. நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பெயர்கள் யாவை;
(vii) இவ்வாகனங்களைக் கொள்வனவு செய்கையில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பில் பொலிஸ் நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்துள்ள முறைப்பாட்டுக்குரிய புலனாய்வின் முன்னேற்றம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-01-27
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-01-27
பதில் அளித்தார்
கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks