பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
227/ '15
கௌரவ சுனில் ஹன்துன்னெத்தி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சுனாமி பேரழிவினால் சேதத்துக்கு உள்ளாகிய தமது வீட்டுக்குப் பதிலாக கூட்டாட்சி வீடுகளிலிருந்து ஒரு வீட்டைப் பெற்றுக்கொண்ட திரு. டபிள்யூ. பிரதீப்பின் பிள்ளையை 2013 ஆம் ஆண்டில் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்புக்குச் சேர்ப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(iii) அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி நிராகரிப்புகளின் பின்னர், சம்பந்தப்பட்ட சிறுமியை பாடசாலையில் அனுமதித்துவிட்டு அறிவிக்குமாறு தெரிவித்து அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் பாடசாலை அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி எழுத்து மூலமான அறிவித்தல் தொடர்பாக பாடசாலை அதிபரின் பதிற்செயற்பாடுகள் யாதென்பதையும்;
(iii) மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, சிறுமி பாடசாலையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;
(iv) மேற்படி சிறுமி பாடசாலையில் சேர்த்துக் கொள்ளப்படாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேற்படி நிராகரிப்புத் தொடர்பாக முறைசார்ந்த விசாரணையொன்று நடத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) மேற்படி சிறுமிக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-08
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-02-11
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks