02

E   |   සි   |  

 திகதி: 2016-02-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0224/2016: தொழில்நுட்பவியல் பாடத்துறை: பல்கலைக்கழக அனுமதி

224/ '15

கெளரவ டலஸ் அழகப்பெரும,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2013.07.15 ஆந் திகதி உயர் தர பாடத்துறையில் தொழல்நுட்பவியல் என்ற பெயரில் புதிய பாடத்துறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) ஆரம்பத்தில் 252 பாடசாலைகளில் 14000 மாணவர்களுக்காக இந்தப் பாடத்துறை ஆரம்பிக்கப்பட்டது என்பதையும்;

(iii) 2016 ஆம் ஆண்டில் பட்டப் பாடநெறிகளைக் கற்பதற்காக தொழில்நுட்பவியல் பாடத்துறையை தோ்ந்தெடுத்த 3000 மாணவர்களுக்கு இடவசதி வழங்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உடன்பட்டது என்பதையும்;

(iv) அரச பல்கலைக்கழகங்களில் பட்டப் பாடநெறிகளுக்கு மேலதிகமாக 6000 மாணவர்களுக்கு தேசிய வாழ்க்கைத்தொழில் தகைமையின் (NVQ) கீழ் கல்வியை வழங்குவதற்காக பல்கலைக்கழக கல்லூரிகள் (University Colleges) ஆரம்பிக்கப்பட்டதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) 2014 ஆம் ஆண்டில் தொழில்நுட்பவியல் பாடத்துறை அமுல்படுத்தப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) இரண்டாவது குழுவாக அந்தப் பாடத்துறையை தொிவுசெய்த மாணவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iii) உயர் தரத்துக்காக தொழில்நுட்பவியல் பாடத்தைக் கற்ற மாணவர்களில் 2016 ஆம் ஆண்டில் பலகலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு சோ்த்துக் கொள்வதற்கு திட்டமிடப்படும் மாணவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

வெவ்வேறாக அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-02-11

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-02-11

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks