பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
196/ '15
கௌரவ விஜித ஹேரத்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஒருங்கிணைந்திருந்த வட - கிழக்கு மாகாண சபை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளாகப் பிரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தின் நிரந்தர குடியிருப்பாளர்களான 270 உத்தியோகத்தர்கள் வட மாகாண சபைக்கு இணைக்கப்பட்டனர் என்பதையும்;
(ii) சுமார் ஏழு வருட காலமாக மேற்கூறப்பட்டவாறு வதிவிடப் பிரதேசத்திற்கு வெளியில் பணியாற்றுவதன் மூலம் மேற்படி உத்தியோகத்தர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதையும்;
(iii) மேற்படி உத்தியோகத்தர்கள் கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் பெற்றுக்கொள்வதற்காக பல சந்தர்ப்பங்களில் முயற்சியெடுத்துள்ள போதிலும் அது பயனளிக்கவில்லையென்பதையும்;
(iv) ஒருசில உத்தியோகத்தர்கள் மட்டும் அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெற்று இடமாற்றங்களைப் பெற்றுள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) கிழக்கு மாகாண குடியிருப்பாளர்கள் அம் மாகாண சபையில் பணியாற்றுவதற்காக மேற்கொள்ளும் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-03
கேட்டவர்
கௌரவ விஜித ஹேரத், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2016-01-26
பதில் அளித்தார்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks