04

E   |   සි   |  

 திகதி: 2010-07-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0274/2010: Centre for policy Alternatives

0274/ ‘10

கெளரவ ராஜீவ விஜேசிங்க,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    மாற்றுக் கொள்கைக்கான நிலையம் என்று அழைக்கப்படும் ஒரு நிறுவனத்தை அவர் அறிவாரா?

(ஆ)    (i)     வெளிநாட்டு நிதியளிப்பினால் இந்நிறுவனம் நன்மையடைந்துள்ளதா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், கடந்த தசாப்தத்தின் ஒவ்வொரு ஆண்டிலும் பெற்றுக் கொண்ட தொகை எவ்வளவு என்பதையும்,

(iii) பெற்றுக்கொண்ட மேற்படி வெளிநாட்டு நிதியங்கள், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதையும்,

(iv) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு நிதிகளினால் ஈடு செய்யப்பட்ட மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தினதும் அதன் துணை நிறுவனங்களினதும் வரவு செலவுத்திட்ட விகிதத்தையும்

அவர் சபையில் குறிப்பிடுவாரா?

(இ) (i) இந்த நிறுவனமோ அல்லது அதன் எவரேனும் பணியாளர்களோ இலங்கையில் வரி செலுத்தும் பொறுப்புடையோராய் உள்ளனரா என்பதையும்,

(ii) அவ்வாறாயின் அவர்கள் தம் பொறுப்பைப் பூர்த்தி செய்துள்ளனரா என்பதையும்,

(iii) இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட சம்பளம் மற்றும் ஏனைய நன்மைகள் எவ்வளவு என்பதையும்,

(iv) இவை தொடர்பாக வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) மாற்றுக் கொள்கை நிலையத்தால் அமைக்கப்பட்ட துணை நிறுவனங்களின் பெயர்களையும், அவ்வற்றுக்கு எவ்வாறு நிதியீட்டம் செய்யப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல் ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-08

கேட்டவர்

கௌரவ கெளரவ ராஜீவ விஜேசிங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks