பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
176/ '15
கௌரவ எம். எச். எம். சல்மான்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1986 ஆம் ஆண்டில் அக்குறணை பிரதேச செயலாளர் பிரிவின் குடியிருப்பாளர்களில் மகாவலி "பீ" வலயத்தின் சேனபுர கிராமத்தில் குடியமர்த்தப்பட்ட சுமார் 38 குடும்பங்கள், 1992.04.14 ஆம் திகதியன்று அலிஞ்சிபொத்தான பிரதேசத்துக்கு எல். ரீ. ரீ. ஈ. பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக உயிர் பாதுகாப்பு கருதி பிரதேசத்தை விட்டு வெளியேறினர் என்பதையும்;
(ii) காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படாத காணிகளை இரத்துச் செய்கின்றபோது மேற்படி காணிகளை இவர்கள் இழந்த அதேவேளை குடியிருப்புக்கு மாத்திரம் மேட்டுநில காணிகளை வழங்கும் பொருட்டு 2013.08.02 ஆம் திகதியன்று விசாரணை நடத்தப்பட்டதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றம் யாதென்பதையும்;
(ii) இன்றளவில் குடியிருப்புக்காக காணித் துண்டுகளை வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-23
கேட்டவர்
கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
---
பதில் தேதி
2015-11-23
பதில் அளித்தார்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks