04

E   |   සි   |  

 திகதி: 2015-11-30   பதிலளிக்கப்பட்டவைகள் 

0170/2015: School and Rural Sports Grounds developed 2010-2015 - Kandy District

170/ '15

 

கௌரவ லக்கி ஜயவர்தன,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) (i) 2010 ஆம் ஆண்டு முதல் 2015 வரையான காலப்பகுதிக்குள் கண்டி மாவட்ட பாடசாலை விளையாட்டு மைதானங்கள் மற்றும் கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

(iii) மாவட்டம் முழுவதிலும் மேற்படி நிதியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) மேற்படி விளையாட்டு மைதானங்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அமைய தனித்தனியே யாது என்பதையும்;

(v) அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்கள் உள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனில், அவை பிரிவு ரீதியாக யாவை என்பதையும்;

(iii) வேலைகள் பூர்த்தி செய்யப்படாதுள்ள விளையாட்டு மைதானங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) அவற்றின் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் தேவைப்படுகின்ற நிதி எவ்வளவு என்பதையும்;

(v) மேற்படி நிதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(vi) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-30

கேட்டவர்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks