04

E   |   සි   |  

 திகதி: 2015-11-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0166/2015: தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவக நாடக அரங்கு: விபரம்

166/ '15

 

கௌரவ லக்கி ஜயவர்தன,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பொல்கொல்லை தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் வளாகத்தில் மஹிந்த ராஜபக்ஷ நாடக அரங்கு எனும் பெயரில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) மேற்படி கட்டடம் திறந்து வைக்கப்பட்டு நீண்ட காலம் கடந்துள்ள நிலையிலும், உரிய விதத்தில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதையும்;

(iii) பெருமளவிலான பணம் அறவிடப்படுவதன் காரணமாக இந்த நாடக அரங்கில் அரங்கக்கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரங்காற்றுகையாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் வாய்ப்புக் கிட்டுவதில்லை என்பதையும்;

(iv) இதன் காரணமாக இவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தின் மூலம் செலவிடப்பட்டுள்ள மொத்தப் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(ii) இது திறந்து வைக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

(iii) இதுவரை மேற்படி நாடக அரங்கில் நடத்தப்பட்டுள்ள அரங்கக்கலை நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) குறித்த அரங்கக்கலை நிகழ்ச்சிகள் யாவை என்பதையும்;

(v) மேற்படி நாடக அரங்கில் அரங்கக்கலை நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்காக ஒரு நாளைக்கு அறவிடப்படும் பணத்தொகை யாது என்பதையும்;

(vi) இதற்காக வழங்கப்படும் நேரம் எவ்வளவு என்பதையும்;

(vii) இதுவரை இந்த நாடக அரங்கில் நடத்தப்பட்டுள்ள அரங்கக்கலை நிகழ்ச்சிகளிலிருந்து பெற்றுக் கொண்டுள்ள மொத்த வருமானம் எவ்வளவு என்பதையும்;

(viii) அரங்காற்றுகையாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் நியாயமான கட்டணத்தில் இந்த நாடக அரங்கில் அரங்கக்கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(ix) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-24

கேட்டவர்

கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-24

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks