பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2015-11-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0150/2015: மலையக அதிவேக நெடுஞ்சாலை : விபரம்

150/ '15

 

கௌரவ டலஸ் அழகப்பெரும,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) மலையக நெடுஞ்சாலையின் முதல் பகுதிக்கு கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மலையக நெடுஞ்சாலையின் முதல் பகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட திகதி யாது என்பதையும்;

(ii) மேற்படி ஆரம்பப் பகுதி ஆரம்பிக்கின்ற மற்றும் முடிவடைகின்ற இடங்கள் யாவை என்பதையும்;

(iii) அதன் மொத்த நீளம் யாது என்பதையும்;

(iv) முதல் பகுதிக்கான பாதைக்குரிய காணிகள் இனங்காணப்பட்டிருப்பின், அக்கிராமங்கள் மற்றும் நகரங்கள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) நிர்மாணிப்புக்குத் தேவையான சுற்றாடல் அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்ட திகதி யாது என்பதையும்;

(ii) சாத்தியக்கூறு கற்கை மேற்கொள்ளப்பட்ட திகதி யாது என்பதையும்;

(iii) இந்த நிர்மாணிப்புக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயர் யாது என்பதையும்;

(iv) குறித்த தெரிவு மேற்கொள்ளப்பட்ட முறையியல் யாது என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) (i) மேற்படி பகுதிக்குத் தேவையான கடன் உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டுள்ளதா என்பதையும்;

(ii) கடன் பெற்றுக் கொள்ளப்படும் நிறுவனம் யாது என்பதையும்;

(iii) கடன் தொகைக்கான வட்டி எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(உ) (i) மலையக நெடுஞ்சாலையின் முதல் பகுதிக்குச் செலவாகும் மொத்த பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

(ii) அதற்கமைய ஒரு கிலோ மீற்றருக்குச் செலவாகும் பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஊ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-06

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-06

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks