பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2015-11-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0149/2015: அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கல் : விபரம்

149/ '15

 

கௌரவ டலஸ் அழகப்பெரும,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு மோட்டார் சைக்கிள்கள் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) ஒவ்வொரு நிறுவனத்தின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

(ஆ) (i) கடந்த சனாதிபதித் தேர்தலில் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு, மோட்டார் சைக்கிள்களுக்காக அறவிடப்பட்ட ரூபா ஐம்பதாயிரம் (ரூபா 50,000) தொகை திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மோட்டார் சைக்கிள்களுக்காக அறவிடப்பட்ட ரூபா ஐம்பதாயிரம் தொகை திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ள ஊழியர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

(இ) (i) அரச ஊழியர்களுக்கு இலவசமாக மோட்டார் சைக்கிள் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) இற்றைவரை அறவிடப்பட்ட ரூபா ஐம்பதாயிரம் தொகையை சகலருக்கும் திருப்பிக் கொடுக்கும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-05

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-05

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks