E   |   සි   |  

 திகதி: 2015-11-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0127/2015: ஹட்டன் நகர தும்புறுகிரிய குடியிருப்பாளர்கள்: வீட்டு உரிமை

127/ '15

2.

கௌரவ விஜித ஹேரத்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) ஹட்டன் நகரத்தின் தும்புறுகிரிய பிரதேசத்தில் உலக வங்கியின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் சுமார் 35 சிங்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள், 33 வருடங்களுக்கும் மேல் குடியமர்ந்துள்ளார்கள் என்பதையும்;

(ii) மேற்படி குடியிருப்பாளர்களில் ஒரு பகுதியினருக்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் சட்டபூர்வமான காணி உறுதிகள் கையளிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(iii) வட்டவல பெருந்தோட்டக் கம்பனி இவர்களை வீடுகளிலிருந்து அகற்றி, மேற்படி காணிப் பிரதேசத்தை கம்பனிக்கு சுவீகரித்துக் கொள்வதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) ஹட்டன் – டிக்கோயா நகர சபை மேற்படி குடியிருப்பாளர்கள் வசிக்கின்ற காணியை சுவீகரித்துக் கொள்வதற்கு ஏகமனதாக பிரேரணையொன்றை நிறைவேற்றியுள்ளது என்பதையும்;

(ii) இக்காணிப் பிரதேசத்தை கம்பனிக்கு சுவீகரித்துக் கொள்வதைத் தடுத்து நியாயத்தை நிறைவேற்றுவதற்காக மேற்படி குடியிருப்பாளர்கள், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளை விழிப்புணர்வூட்டியுள்ளார்கள் என்பதையும்;

அவர் மேலும் அறிவாரா?

(இ) (i) இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு வட்டவல கம்பனியின் அழுத்தங்களிலிருந்து மேற்படி குடியிருப்பாளர்களை விடுவித்து இவர்களின் வீட்டு உரிமையை உறுதி செய்துகொடுக்கும் பொருட்டு தலையீடு செய்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-03

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      ඔව්.

              (ii)      ඔව්.

             (iii)      ඔව්.

(ආ)         (i)      නැත.

              (ii)      ඔව්.

(ඇ)         (i)      ඔව්.

              (ii)      ඔප්පු ලබාගත් නිවැසියන් ආරක්ෂා කිරීමටත්, ඉඩම් ප්‍රතිසංස්කරණ කොමිෂන් සභාවේ අයිතිවාසිකම් ආරක්ෂා කර ගැනීමටත්, වටවල වැවිලි සමාගමෙන් ඇතිවන බලපෑම් ඉවත්කර ගැනීමටත් දැනටමත් පහත සඳහන් නඩු අංක යටතේ අධිකරණමය ක්‍රියා මාර්ග ගනු ලැබ ඇත.

1. HC/NE/02/2015 (ප්‍රතිශෝධන) දික්ඔය ඩන්බාර් කොටස.

2 CA/PHC/RA/24/2015 හැටන් වතු යායේ කොටසක් සම්බන්ධව.

(ඈ) අදාළ නොවේ.

பதில் தேதி

2015-12-02

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks