01

E   |   සි   |  

 திகதி: 2016-04-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0106/2016: தென் கொரியா மற்றும் மலேசியாவில் மரணித்த இலங்கைத் தொழிலாளர்: விபரம்

106/ ’15

கௌரவ புத்திக பத்திறண,— வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)     2010.01.01 ஆம் திகதி தொடக்கம் 2014.12.31 ஆம் திகதி வரையிலான ஐந்தாண்டு காலப் பகுதியில் தென்கொரியா மற்றும் மலேசியாவில் மரணித்த இலங்கைப் பிரசைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டின்படி தனித்தனியாக எத்தனையென்பதையும்,

(ii) இவர்களது பெயர், வயது, இலங்கையில் வசித்த முகவரி மற்றும் மேற்படி நாடுகளில் புரிந்த தொழில் யாவையென்பதையும்,

(iii) இந்த ஆட்களின் மரணங்களுக்கான அண்மித்த காரணங்கள் யாவையென்பதையும்,

(iv) இவர்கள் சார்பாக அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்கள் யாவையென்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2010.01.01 ஆம் திகதி தொடக்கம் 2014.12.31 ஆம் திகதி வரையிலான ஐந்தாண்டு காலப் பகுதியில் தென்கொரியா மற்றும் மலேசியாவில் முழுமையாக அல்லது பகுதியளவில் அங்கவீன நிலைமைக்கு உள்ளாகிய இலங்கைப் பிரசைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டின் பிரகாரம் தனித்தனியாக எத்தனையென்பதையும்,

(ii) இவர்களது பெயர், வயது, இலங்கையில் வசித்த முகவரி மற்றும் மேற்படி நாடுகளில் மேற்கொண்ட தொழில் யாவையென்பதையும்,

(iii) இவர்கள் அங்கவீனமடைந்ததற்கான காரணங்கள் யாவையென்பதையும்,

(iv) இவர்கள் சார்பாக அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்கள் யாவையென்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2016-04-08

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-05-04

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks