02

E   |   සි   |  

 திகதி: 2015-11-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0093/2015: முதலாம் ஆண்டுக்குப் பிள்ளைகள் சேர்ப்பு : வசிப்பிடத்தை நிரூபித்தல்

93/ '15

 

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பாடசாலைகளுக்கு முதலாம் ஆண்டுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது தமது வசிப்பிடத்திற்கான உரிமையை நிரூபிக்கின்ற உறுதி இன்மையின் காரணமாக மாத்திரம் நேர்முகப் பரீட்சைக்குக்கூட அழைக்கப்படாத சந்தர்ப்பங்கள் உள்ளதென்பதையும்;

(ii) கடந்த அரசாங்க காலத்தில் உறுதிகள் இன்மையின் காரணத்தினால் மாத்திரம் பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படாத பிள்ளைகள் சம்பந்தமாக தனியானதொரு மேன்முறையீட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) பாடசாலைகளுக்கு முதலாம் ஆண்டுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது வசிப்பிடத்தை நிரூபிப்பதற்காக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்ட காணியின் உறுதியை சமர்ப்பிக்க வேண்டுமெனும் சட்டமொன்று உள்ளதா என்பதையும்;

(ii) உறுதி இன்மையின் காரணத்தினால் மாத்திரம் இற்றை வரை பாடசாலைகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படாத பிள்ளைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) உரிமை உள்ளதா இல்லையா என்பதை கவனத்திற்கொள்ளாது குடியிருப்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதனை தகைமையாகக் கருதி நியாயமான தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-21

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-21

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks