04

E   |   සි   |  

 திகதி: 2015-12-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0089/2015: இலவச கைவினை அல்லது வாழ்க்கைத் தொழிற்பயிற்சி: வசதிகள்

89/ '15

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) க.பொ.த.(சா. தரம்) சித்தியடைந்த இளைஞர் யுவதிகளை அரசாங்க அல்லது தனியார்துறையில் தொழில்களுக்கு ஆட்சேர்ப்பு செய்ய முன்னர் அவர்களின் திறமைகள் மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் இலவசமாக கைவினை அல்லது வாழ்க்கைத் தொழிற்பயிற்சியை வழங்குவதற்காக தற்போதுள்ள வசதிகள் போதுமானவையா;

(ii) அவ்வாறு இல்லாவிடின், அதிகரிக்கப்படவேண்டிய வசதிகளின் அளவு யாது;

(iii) வாழ்க்கைத் தொழில் மற்றும் கைவினைப் பயிற்சிக்காக உள்ள பாடத்திட்டங்கள் தற்காலத்திற்கு எந்தளவில் பொருத்தமாயுள்ளன; அவ்வாறின்றேல் போதுமானதா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?

(ஆ) (i) மேற்படி பயிற்சிபெறுநர்களை எவ்விதமான அரசியல் அழுத்தமும் இன்றி, தகைமைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் மாத்திரம் அரச அல்லது தனியார்துறை தொழில்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அவசியமான கொள்கை அல்லது பொருத்தமான முறையியலொன்றை தயாரிப்பாரா;

(ii) அரசாங்க வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகையில் நிரப்பப்பட உள்ள பதவிகளின் எண்ணிக்கையை அந்த அறிவித்தலுடன் பிரசுரிப்பதால் இளைஞர் யுவதிகள் அநாவசியமான எதிர்பார்ப்புக் குன்றுதல் களுக்கு உள்ளாவதை தவிர்க்க இயலுமென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா;

(iii) ஆமெனில், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-12-09

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-02-11

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks