04

E   |   සි   |  

 திகதி: 2015-11-27   பதிலளிக்கப்பட்டவைகள் 

0063/2015: இலத்திரனியல் கழிவுப்பொருள் முகாமைத்துவம் : வேலைத்திட்டம்

63/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தற்போது இலங்கையில் பெருமளவில் இலத்திரனியல் கழிவுப்பொருட்கள் வௌியேற்றப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) மேற்படி கழிவுப்பொருட்களில் ஒரு பகுதி பாதுகாப்பற்ற முறையில் சூழலுக்கு வௌியேற்றப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) இலத்திரனியல் கழிவுப்பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சூழலுக்கு வௌியேற்றப்படுதல் சூழல் மாசடைதலுக்கு பிரதானமான காரணியாக மாறியுள்ளதென்பதையும்;

(iv) மக்களின் சுகதாரத்திற்கும் இலத்திரனியல் கழிவுப்பொருட்கள் அச்சுறுத்தலாக அமைகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இலங்கையில் ஆண்டொன்றுக்கு அகற்றப்படும் இலத்திரனியல் கழிவுப்பொருட்களின் அளவு எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி கழிவுப்பொருட்களை முகாமை செய்தல் சம்பந்தமாக வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அவ்வேலைத்திட்டம் யாதென்பதையும்;

(iv) தற்போது அவ்வேலைத்திட்டம் நடைமுறையில் உள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இலத்திரனியல் கழிவுப்பொருட்களின் மூலம் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகின்ற இரசாயனப் பொருட்கள் பற்றி ஏதேனும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி ஆய்வை மேற்கொண்ட நிறுவனத்தின் பெயர் மற்றும் அவ்வாய்வு மேற்கொள்ளப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iii) இன்றேல், எதிர்காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-27

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-28

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுராத ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks