01

E   |   සි   |  

 திகதி: 2015-11-27   பதிலளிக்கப்பட்டவைகள் 

0061/2015: தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் : பயிற்சியளித்தல்

61/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வௌிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தொழில்வாய்ப்புகளுக்காக வௌிநாடு செல்கின்ற இலங்கையர்களுக்கு பயிற்சியளிக்கின்ற நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி பயிலுநர்களுக்கு அரசாங்கம் கொடுப்பனவொன்றை வழங்குவதாயின், அத்தொகை யாதென்பதையும்;

(iii) மேற்படி பயிலுநர்கள் அரசாங்கத்திற்கு ஏதேனும் பணத்தொகையை செலுத்த வேண்டியிருப்பின், அத்தொகை யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி பயிற்சி நிலையங்களில் பயிலுநர்களுக்கு இலங்கையினதும் மற்றும் அவர்கள் சேவைக்காக செல்வதற்கு எதிர்பார்க்கின்ற நாட்டினதும் குடிவரவு, குடியகல்வு சட்டங்கள், சுங்கச் சட்டங்கள் மற்றும் செலாவணிச் சட்டங்கள் பற்றிய அறிவு வழங்கப்படுகின்றதா என்பதையும்;

(ii) இன்றேல், அதற்காக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-27

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-01-27

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks