பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
37/ '15
கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வைப்புக்களுக்கான வட்டி மற்றும் கடன்கள் மீதான வட்டி வீதங்கள் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்பட்டபோதிலும், வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகள் மீதான வட்டி வீதங்களை மிக உயர் மட்டத்தில் பேணிவருகின்றன என்பதையும்;
(ii) மேற்படி நிலமையினால் வாடிக்கையாளர்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப் படுகின்றார்கள் என்பதையும்;
(iii) இந்நாட்டு வங்கிகளில் மேலதிக திரவத்தன்மை காணப்படுகின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) கடன் அட்டைகள் மீதான வட்டியைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
(ii) வைப்புக்கள் மீதான வட்டி வீதங்களை உயர்த்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்கின்றதா;
(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை;
(iii) மேற்படி ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படும் திகதி யாது;
(iv) வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்ப்பது யாது;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-03
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2015-11-03
பதில் அளித்தார்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks