04

E   |   සි   |  

 திகதி: 2015-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0034/2015: சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : புனரமைப்பு நடவடிக்கைகள்

34/ '15

 

கெளரவ புத்திக பத்திறண,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2014 ஆம் ஆண்டில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்ட பணத் தொகை யாதென்பதையும்;

(ii) மேற்படி புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட கம்பனி யாதென்பதையும்;

(iii) மேற்படி நிறுவனத்துக்கு ஏற்புடைய புனரமைப்பு நடவடிக்கைகளை வழங்கும் போது கேள்விப்பத்திரம் கோரல் நடைபெற்றதா என்பதையும்;

(iv) ஆமெனில், அந்நிறுவனம் சமர்ப்பித்திருந்த கேள்விப்பத்திரத்தின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

(v) கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்திருந்த ஏனைய நிறுவனங்கள் யாவை என்பதையும்;

(vi) மேற்படி நிறுவனங்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி, இலக்கங்கள் உரித்தான நாடுகள் மற்றும் கேள்விப் பத்திரங்களின் பெறுமதி வெவ்வேறாக யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி நிறுவனத்துடன் சேர்ந்து செயலாற்றியதன் மூலம் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

---

பதில் தேதி

2015-11-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks