01

E   |   සි   |  

 திகதி: 2015-11-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0033/2015: மட்டக்களப்பு மாவட்ட சிங்கள மக்கள்: அடிப்படை வசதிகள்

33/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிங்கள மக்கள் சனத்தொகை எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி மக்கள் வசிக்கின்ற கிராமங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில், சிங்களக் கிராமங்களில் வசிக்கின்ற மக்களுக்கு வீடு, நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவில் கிடைப்பதில்லை என்பதையும்;

(ii) மேற்படி மக்களில் பெரும்பாலானோருக்கு அரசாங்க சேவைகள் முறையாக கிடைப்பதில்லை என்பதையும்;

(iii) மேற்படி மக்களை தமது கிராமங்களிலிருந்து வெளியேற்ற ஒரு சிலர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(இ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கின்ற சிங்கள மக்களுக்குத் தேவையான வீடு, நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(ii) மேற்படி மக்களுக்கு தமது கிராமங்களின் உரிமையை உறுதிசெய்துகொடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

(iii) யுத்தத்தின் காரணமாக மட்டக்களப்பிலிருந்து கிராமங்களை விட்டு வேறு பிரதேசங்களுக்கு புலம்பெயர்ந்துள்ள சிங்கள மக்களை மீண்டும் அவர்களின் பழைய கிராமங்களுக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(iv) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-23

பதில் அளித்தார்

கௌரவ டி.எம். சுவாமிநாதன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks