04

E   |   සි   |  

 திகதி: 2015-10-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0028/2015: Demolition of British Era Wall and building a netting wall - Colombo Port

28/ '15

 

​கௌரவ புத்திக பத்திறண,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) கொழும்பு துறைமுகத்தில் பிரித்தானியர்களின் காலம் தொட்டு இருந்துவந்த பாரிய மதிலை உடைத்து பிளாஸ்டிக் காப்பிடப்பட்ட கம்பி வலையொன்றை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) இது துறைமுகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகுமென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிர்மாணிப்புகள் துறைமுக அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும்;

(ii) மேற்படி நிர்மாணிப்பு தனியார் நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப் படுவதாயின் அந்நிறுவனத்தின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் யாவையென்பதையும்;

(iii) மேற்படி கம்பனிக்கு இவ்வொப்பந்தம் வழங்கப்படுகின்ற போது கேள்விப்பத்திரம் கோரப்பட்டதா என்பதையும்;

(iv) இக்கேள்விப்பத்திரத்தின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

(v) இதற்காக கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்த ஏனைய கம்பனிகள் யாவையென்பதையும்;

(vi) இக்கம்பனிகளால் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விப்பத்திரங்களின் பெறுமதி வெவ்வேறாக யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) 2014 ஆம் ஆண்டில் கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட பணத்தொகை யாதென்பதையும்;

(ii) 2015 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்புக்காக செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள பணத்தொகை யாதென்பதையும்;

அவர் குறிப்பிடுவாார?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-22

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks