பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
22/ '15
கௌரவ டலஸ் அழகப்பெரும,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) கௌரவ நிதி அமைச்சர் 2015 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்டவாறான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆற்றிய உரையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூபா 50 இலட்சம் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஏற்பாட்டுக்கு பதிலாக ரூபா 100 இலட்சம் பெற்றுக்கொடுக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டதோடு, கௌரவ பிரதம அமைச்சரும் அதனை உறுதிப்படுத்திய போதிலும், 2015 ஆம் ஆண்டுக்கென 2015 செத்தெம்பர் 10 ஆம் திகதி வரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஏற்பாடுகள் வழங்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) இதுவரை வரலாறு பூராவும் பாராளுமன்ற உறுப்பினருக்குக் கிடைத்த ரூபா 50 இலட்சம் தொகையையேனும் இந்த ஆண்டின் எஞ்சியுள்ள சில மாத காலத்தினுள் வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) இன்றேல், தொடர்ச்சியாக நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மக்கள் பிரதிநிதி ஒருவர் அனுபவித்து வந்த சிறப்புரிமையை தற்போதைய அரசாங்கம் பறித்துக் கொண்டுள்ளதாக ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-10-20
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2015-11-21
பதில் அளித்தார்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks