04

E   |   සි   |  

 திகதி: 2015-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0021/2015: Hedging Agreement by Ceylon Petroleum Corporation 2007 - Investigations

21/ '15

 

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் 2007 ஆம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகள் பலவற்றுடன் ஹெஜின் உடன்படிக்கைகளை செய்துகொண்டபோது பயன்படுத்திய தவறான முறையியலின் காரணமாக உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து குறிப்பிட்ட வங்கிகளுக்கு பெருமளவு பணத் தொகையை செலுத்த நேரிட்டமையால் நாட்டுக்கு பாரிய நிதிசார் நட்டம் நிகழ்ந்தமை தொடர்பில் நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் புலனாய்வொன்று மேற்கொள்ளப்படுகின்றதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள புலனாய்வின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) எத்தனை வங்கிகளுடன் ஹெஜின் உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டுள்ளன என்பதையும்;

(ii) மேற்படி உடன்படிக்கைகள் சார்பில் ஒவ்வொரு வங்கியினாலும் செலுத்த வேண்டி நேரிட்டுள்ள பணத் தொகை யாதென்பதையும்;

(iii) மேலும் எவ்வளவு பணத் தொகையை செலுத்த வேண்டிய அபாயம் நிலவுகிறது என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) (i) மேற்படி உடன்படிக்கையை செய்துகொள்வதற்கும் மேற்படி வெற்றியளிக்காத முறையியலை பின்பற்றுவதற்கும் அங்கீகாரம் வழங்கியவர்கள் யாவரென்பது புலனாய்வுகளின்போது தெரியவந்துள்ளதா என்பதையும்;

(ii) மேற்படி நிதிசார் நட்டத்திற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இனங்காணப்பட்டுள்ளனரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-23

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks