01

E   |   සි   |  

 திகதி: 2015-10-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0020/2015: இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் : நிதிசார் துஷ்பிரயோகம்

20/ '15

 

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— வெளிநாட்டு ​தொழில்வாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்றுள்ள நிதி வளங்களின் துஷ்பிரயோகம் பற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதி 2015 ஜூன் மாதம் 10 ஆம் திகதி, IS/INV/PC/GDE/2015/04 ஆம் இலக்க கணக்காய்வு மீள்நோக்கின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேலே (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிசார் துஷ்பிரயோகங்கள் யாவை;

(ii) மேற்படி துஷ்பிரயோகங்களின் பெறுமதி வெவ்வேறாக யாது;

(iii) கணக்காய்வு மீள்நோக்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ள மேற்படி நிதிசார் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அமைச்சு புலனாய்வொன்றை ஆரம்பித்துள்ளதா;

(iv) ஆமெனில், அதன் தற்போதைய முன்னேற்றம் யாது;

(v) வெளிப்படுத்தப்பட்டுள்ள நிதிசார் குற்றங்கள் தொடர்பில் பொலிஸ் நிதிசார் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புலனாய்வுகளின் தற்போதைய நிலைமை யாது;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-22

கேட்டவர்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-23

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks