பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
14/ '15
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) 2015 சனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டு முன்னாள் விடயப்பொறுப்பு அமைச்சரின் ஆலோசனையின் பேரில் வாழ்வின் எழுச்சி நிதியத்தைப் பயன்படுத்தி ரூபா 20,132,277/- இற்கு (20.1 மில்லியன்) GI குழாய்கள் (கொடிக் கம்பங்கள்) கொள்வனவு செய்யப்பட்டுள்ளதை அவர் அறிவாரா?
(ஆ) (i) வாழ்வின் எழுச்சி நிதியத்தின் நோக்கங்களுக்கு அமைய பிரதேச சபைகளால் GI குழாய்களைக் கொள்வனவு செய்து விநியோகிப்பதற்கான இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், அது வாழ்வின் எழுச்சி சட்டத்தின் எப்பிரிவின் கீழ் என்பதையும்;
(iii) அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அதிகாரி யார் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) இவ்வாறு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை காரணமாக இழக்கப்பட்டுள்ள ரூபா 20 மில்லியன் தொகையை அறவிடுவதற்காக தற்போதைய அமைச்சர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) இது தொடர்பாக நிதிசார் குற்றப் புலனாய்வொன்று மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி புலனாய்வின் முன்னேற்றம் யாது என்பதையும்;
(iv) இது தொடர்பில் நிருவாக ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-10-23
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2015-11-23
பதில் அளித்தார்
கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks