E   |   සි   |  

 திகதி: 2015-10-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0013/2015: தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறையாக்கல் ஆணைக்குழு: முறைகேடான அரச நிதிப் பயன்பாடு

13/ '15

 

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 சனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்டு சீல அனுஷ்டானத்துக்கான புடவைகள் உட்பட பல்வேறு பொருட்களை வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக ரூபா 600 மில்லியன் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக அப்போதைய தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறையாக்கல் ஆணைக்குழுவின் தவிசாளரும், முன்னாள் சனாதிபதியின் செயலாளருமான திரு. லலித் வீரதுங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் திரு. அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நிறுவன ரீதியான நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) இது தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற நிதிசார் குற்றப் புலனாய்வுகளின் தற்போதைய நிலைமை யாது என்பதையும்;

(iii) பாரியளவிலான நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தயக்கம் காட்டுவதெனில், இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) அரசு இழந்துள்ள ரூபா 600 மில்லியன் தொகையை அறவிடுவதற்கு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறையாக்கல் ஆணைக்குழுவின் நிதியைப் பயன்படுத்தி சீல அனுஷ்டானத்துக்கான புடவைகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தவிர, 2015 சனாதிபதி தேர்தலுடன் தொடர்புடையதாக, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஏனைய சம்பவங்கள் யாவை என்பதையும்;

(iii) அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-10-21

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2015-11-21

பதில் அளித்தார்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks