04

E   |   සි   |  

 திகதி: 2010-07-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

0141/2010: Kilinochchi Power Plant

0141/ ’10

 

கெளரவ விக்டர் அந்தனீ,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      கிளிநொச்சி மின்சக்தி நிலையத்தை புனரமைக்கும் முதலாம், இரண்டாம், கட்டங்களுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த நிதி வெவ்வேறாக எவ்வளவென்பதையும்,

           (ii)    ஒவ்வொரு கட்டங்களின் இறுதியிலும் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் மொத்த மின் அலகுகளின் அளவு எத்தனை மெகாவொட் என்பதையும்,

(iii) அதன் மூலம் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்க்கும் புதிய மின்சார இணைப்புக்கள் எவ்வளவென்பதையும்,

(iv) புனரமைப்புப் பணிகள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ள திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) வவுனியாவிலிருந்து சுன்னக்குளம் வரையிலான, மின்சாரத்தை ஊடுகடத்தும் செயற்பாட்டை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் முதலாம், இரண்டாம் கட்டங்களுக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்தச் செலவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்,

(ii) முதலாம், இரண்டாம் கட்டங்களின் கீழ் மின்சாரத்தை ஊடுகடத்துகின்ற உத்தேச தூரத்தின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்,

(iii) கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ள திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-01

கேட்டவர்

கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks