01

E   |   සි   |  

 திகதி: 2010-07-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

0133/2010: Janatha Estate Development Board

0133/ ’10

 

கெளரவ ஜானக பண்டார,—  அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்குச் சொந்தமான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின், 07 ஏக்கர் 02 ரூட் 05 பர்ச் விஸ்தீரணம் கொண்ட மட்டக்குளிய மோதர களஞ்சியசாலை, கோபோர்ட் தனியார் கம்பனிக்கு 65,317/= ரூபா மாதாந்த வாடகைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி உடன்படிக்கைக்கு அரச விலை மதிப்பீடும் அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளதா என்பதையும்,

(ii) சம்பந்தப்பட்ட குத்தகைக்காரர் குத்தகை உடன்படிக்கைக்கமைய சட்டபூர்வமாக நடந்துகொண்டுள்ளாரா என்பதையும்,

(iii) சட்டபூர்வமாக நடந்துகொண்டிருக்காவிடின் மீண்டும் அந்தக் களஞ்சியசாலையை மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்குப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்,

(iv) இதுவரை அவ்வாறு சட்டபூர்வமாக நடந்தகொள்ளாவிடின் அதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்,

(v) இவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-01

கேட்டவர்

கௌரவ கெளரவ ஜானக பண்டார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks