01

E   |   සි   |  

 திகதி: 2014-07-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

4950/2014: Renewing contract with the PV Oil Singapore

4950/ ’14

கெளரவ சுஜீவ சேனசிங்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      ‘பி வீ ஒயில்’ எனும் சிங்கப்பூர் கம்பனியுடன் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகிகள் 2011.10.07 ஆம் திகதி மற்றும் 2012.01.25 ஆம் திகதி ஆகிய இரு சந்தர்ப்பங்களிலும் கைச்சாத்திட்ட ஊழல் மிகுந்த உடன்படிக்கையை மீண்டும் புதுப்பிக்க தயாராகின்றனர் என்பதையும்;

(ii) ஆறு மாத காலங்களுக்கு இரண்டு இலட்சத்து நாற்பது ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல் இறக்குமதி செய்வதற்கு இக் கம்பனியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ரூபா 116 கோடி நட்டமேற்பட்டதென்பதையும்;

(iii) 2013 ஆம் ஆண்டில் இவ்வுடன்படிக்கையை மீண்டும் கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளதென தொழிற் சங்கங்கள் குற்றம் காட்டுகின்றன என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி ஊழல்கள் காரணமாக நாளுக்கு நாள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைகின்றது என்பதையும்;

(ii) இந் நட்டத்தை ஈடுசெய்ய அடிக்கடி எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகின்றது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-25

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks