01

E   |   සි   |  

 திகதி: 2010-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0099/2010: Samurdhi

0099/ ’10

கெளரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா,—  பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     கம்பஹா மாவட்டத்தில், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதம் 30 ஆம் திகதிக்கு உரித்துடைமை பெற்றிருந்த சமுர்த்தி பெறுநர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்,

(ii) அவ்வாறு உரித்துடைமை பெற்றவர்களுக்கு செலுத்தப்பட்ட பணத்தொகை, அவர்களின் பெயர்கள், முகவரிகள் யாதென்பதையும்,

(iii) 2004, 2005, 2006, 2007 ஆம் ஆண்டுகளில் சமுர்த்தி பெறுநர்களுக்கு செலுத்தப்பட்ட பணத் தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்

அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேற்கூறிய ஆண்டுகளில் சமுர்த்தி பெறுநர்களாக இருந்து பின் நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பெயர்கள், முகவரிகள் யாவை என்பதையும்,

(ii) அவ்வாறு நீக்கப்பட்டது எந்த அடிப்படையின் கீழ் என்பதையும்,

(iii) புதிதாக இணைந்து கொண்ட சமுர்த்தி பெறுநர்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு செலுத்தப்பட்ட பணத் தொகை, அவர்களின் முகவரிகள் யாதென்பதையும்

அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-08

கேட்டவர்

கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks